அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ரேமோ டி சவுசா இயக்கத்தில் நடனத்தை மையப்படுத்தி வெளிவர உள்ள படம் ஏபிசிடி 2. இந்த படத்தில் ஹீரோவாக வருண் தவானும், ஹீரோயினாக ஸ்ரதா கபூர் நடித்து வருகின்றனர். இவர்கள் தவிர முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பிரபுதேவாவும் நடிக்க உள்ளார்.
நடனத்தின் மீது அதிதீவிர ஈடுபாடு கொண்டவர்களாக வருணும், ஸ்ரதாவும் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஹோட்டலில் பணிபுரியும் வெயிட்டராக வருணும், சிகை அலங்கார நிபுணராக ஸ்ரதாவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஃபஸ்ட்லுக் படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் ஸ்ரதாவும், வருணும் மிகவும் அழகாக காட்டப்பட்டுள்ளனர். இது ரசிகர்களிடம் படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் என ஏபிசிடி 2 படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.