துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
ஹாலிவுட்டில் இந்த ஆண்டில் மில்லியன் டாலர் ஆர்ம், த ஹன்ட்ரட் புட் ஜர்னி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான், தற்போது பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலேயின் சுயசரிதை கதையில் உருவாகும் பீலே என்ற படத்திற்கும் இசையமைக்கிறாராம். இப்படத்தை ஜெய் சிம்பாலிஸ்ட், மைக்கேல் சிம்பாலிஸ்ட் ஆகிய இரட்டையர் இயக்குகின்றனர்.
பிபா உலகக்கோப்பை பிரேசிலில் நடைபெற்றபோது இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படம் தாமதமாகி விட்டது. அதனால் 2015ல் பீலே படத்தை வெளியிடும் முயற்சிகள் தற்போது துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு தான் இசையமைப்பதை தற்போது தனது டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
அதோடு, பிரபல கால்பந்து வீரரின் உணர்ச்சிப்பூர்வமான கதை என்பதோடு, இந்த படத்திற்கு பாடல் எழுதி பின்னணி பாட உள்ள ஆனா பியட்ரிசுடன் தான் பணியாற்றுவது புதிய அனுபவத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் ரகுமான். மேலும், இரண்டு முறை கிராமி விருதுகள் பெற்ற தகுதியே ஏ.ஆர். ரகுமானுக்கு இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளதாம்.