ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ஹோமி அடாஜனியாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஃபைண்டிங் ஃபன்னி படம் முதல் நாளிலேயே ரூ.5.1 கோடியை வசூலித்துள்ளது. இதனால் ஃபைண்டிங் ஃபன்னி படக்குழுவினர் எக்கசக்க மகிழ்ச்சியில் உள்ளனர். தீபிகா படுகோனே, அர்ஜூன் கபூர், நசீருதீன் ஷா, பங்கஜ் கபூர், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த காமெடி படத்திற்கு விமர்சனங்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
வார இறுதி நாளில் இப்படம் வெளியிடப்படுவதால் ரசிகர்களின் வரவேற்பை பெரும் என படக்குழுவினர் எதிர்பார்த்தபடியே, நாடு முழுவதும் இப்படம் வெளியிடப்பட்ட தியேட்டர்களில் எல்லாம் கவுஸ்ஃபுல் போர்டு வைக்கப்பட்டுள்ளதாம். தினேஷ் விஜனின் மேடாக் பிலிம்ஸ் தயாரித்து, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ள ஃபைண்டிங் ஃபன்னி படம், விக்ரம் பட்டின் கிரியேச்சர் 3டி படத்தின் முதல் நாள் வசூலை விட அதிக வசூலை பார்த்துள்ளதாம்.
இந்தியாவின் முதல் கிரியேச்சர் படமான கிரியேச்சர் 3டி படத்திற்கு, ரிலீசான முதல் நாளில் ரூ.3.24 கோடி வசூலாகி உள்ளது. பிபாசா பாசு, இம்ரான் அப்பாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் பட், தயாரித்து இயக்கி உள்ள இந்த படம் டி-சீரியஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.