சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
த்ரிஷா, தெலுங்கு நடிகர் ராணாவின் காதல் நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்கிறார்கள். பொது விழாக்கள், சினிமா விழாக்களுக்கு சேர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு கணவன் மனைவி போலவே இணைந்து வந்தார்கள். தற்போது மலேசியாவில் நடக்கும் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இருவரும் ஒரே விமானத்தில் அருகருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறார்கள். அந்தப் படத்தை ராணா தனது பேஸ்புக்கில் அப்லோட் செய்திருக்கிறார். விமானம் மலேசியா செல்லும் வரை இருவரும் சிரித்து பேசிக்கோண்டே இருந்ததாவும். இறங்கி இருவரும் ஒரே ஓட்டலுக்கு ஒரே காரில் சென்றதாகவும் அவருடன் பயணம் செய்தவர்கள் கூறுகிறார்கள்.