‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. அந்த ஒரே படத்தில் நடித்தவருக்கு அடுத்தபடியாக பென்சில், ஜீவா, ஈட்டி என பல படங்கள் கைவசம் உள்ளன. அப்படி அவர் நடித்த சில படங்கள் முடிந்து விட்டதால் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், ஸ்வேதா பாசு விபச்சார வழக்கில் கைது செயயப்பட்டதை அடுத்து, ஆந்திராவில் ஹோட்டல் ஹோட்டலாக ரெய்டு நடத்தி வருகிறர்களாம் போலீசார். அதையடுத்து மேலும் சில நடிகைகளும் பிடிபட்டுள்ளனராம். அதில் திவ்யஸ்ரீ என்றொரு நடிகையும் சமீபத்தில் கைதாகியிருக்கிறாராம். ஆனால், திவ்யஸ்ரீயை ஸ்ரீதிவ்யா என்று நினைத்த சில மீடியாக்கள் அவரது போட்டோவை வைத்து செய்தி வெளியிட்டு உள்ளனர்.
இந்த விசயம் ஸ்ரீதிவ்யாவின் காதுக்கு செல்ல அதிர்ச்சியடைந்து விட்டாராம். உடனடியாக தனது உதவியாளர்களை அனுப்பி என் படம் எப்படி வெளியே வந்தது என்று விசாரியுங்கள் என்று முடுக்கி விட்டுள்ளார். அதையடுத்து நடந்த விசாரணையில் திவ்யஸ்ரீ என்ற நடிகையைத்தான் ஸ்ரீதிவ்யா என்று நினைத்துக்கொண்டு இப்படி செய்தி வெளியிட்ட தகவல் கிடைத்திருக்கிறது.
இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட மீடியாக்களை தொட்ர்பு கொண்டு, ஒரு ஸ்ரீயை மாற்றிப்போட்டு இப்படி என்னை விலைமாதுவாக்கி விட்டீர்களே. நான் தப்பு தண்டா செய்யாத ரொம்ப நல்ல பிள்ளையாக வளர்ந்து வருகிறேன். இந்த நேரததில் இப்படி அசிங்கப்படுத்தி விட்டீர்களே என்று தன்னிலை விளக்கம கொடுத்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா.