இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமா நட்சத்திரங்களில் பெரும்பாலானவர்கள் ஐபோனையே பயன்படுத்தி வருகின்றனர். ஐபோனில் புதிய மாடல்கள் அறிமுகமாகும்போது உடனே அதை வாங்கிவிடுகின்றனர். மற்றவர்கள் வாங்குவதற்கு முன் நாம் முதலில் வாங்கிவிட வேண்டும் என்ற மனோபாவம் பல நட்சத்திரங்களிடம் இருக்கிறது. ஐபோனில் புதிய வரவு..ஐபோன் 6! உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 6 தற்போது வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த போனுக்கு ஹாலிவுட் பிரபலங்களிலிருந்து, உள்ளூர் சினிமா பிரபலங்கள் வரை பலரும் ரசிகர்கள். இப்போது.... அனைவரின் பார்வையும் இந்த ஐபோன் 6 மீதுதான்.
நடிகை ஹன்சிகாவுக்கும் இந்த ஐபோன் 6 மீது அலாதியான ஆசையாம்.
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஆப்பிள் ஐபோன் 6 அறிமுகமானதை இப்போதுதான் நேரடியாக பார்த்தேன். கிரேஸி பீஸ்... இந்த போன் எனக்கு மிக விரைவாக தேவை... ஆப்பிளின் ரசிகை! என குறிப்பிட்டிருக்கிறார்.
ஹன்சிகாவின் ரசிகர்களே அம்மணியின் குரல் கேட்கிறதா?