ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி ஆகிய படங்களின் தோல்வி காரணமாக சட்டென சரிந்துபோனது கார்த்தியின் மார்க்கெட். பிரியாணி படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடித்த படம் மெட்ராஸ். அட்டகத்தி பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்திக்கு ஜோடியாக கேத்ரின் தெரஸா நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இத்தனை பின்புலம் இருந்தும் மெட்ராஸ் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை. காரணம் தியேட்டர் அதிபர்கள் யாரும் மெட்ராஸ் படத்தை திரையிட ஆர்வம் காட்டாததுதான்.
இதன் காரணமாக, ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகி பல மாதங்களாகியும் மெட்ராஸ் படம் தியேட்டருக்கு வராமலே முடங்கிக்கிடந்தது. இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஒரு காரியம் செய்தார். தொடர்ந்து படங்கள் எடுத்து வரும் எல்ரெட் குமார், சி.வி.குமார் ஆகியோரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு ட்ரீம் ஃபேக்டரி என்ற விநியோக கம்பெனியை தொடங்கினார். இதன் மூலம் பெட்டியில் கிடந்த மெட்ராஸ் படம் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
இதற்கிடையில் மெட்ராஸ் படத்துக்கு யு சான்றிதழ் பெற கடும் முயற்சிகளை செய்தனர். படத்தில் அநியாத்துக்கு வன்முறைக்காட்சிகள் இருந்ததால் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் வரிவிலக்கு கிடைக்காது என்பதால் தியேட்டர்காரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.