ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1980களின் முன்னணி நடிகையான ரேவதி, சில வருடங்களுக்கு முன் வரை தமிழில் அக்கா கதாபாத்திரத்திலும், அம்மா கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்துக் கொண்டிருந்தார். சில படங்களை இயக்கியும் இருக்கிறார். ஆனால், சமீபகாலமாக தமிழில் அவருடைய ஈடுபாட்டை குறைத்துக் கொண்டார். தமிழில் கடைசியாக சிம்பு நடித்து வெளிவந்த 'ஒஸ்தி' படத்தில் சிம்புவின் அம்மாவாக நடித்திருந்தார். அந்தப் படம் வெளிவந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாகிவிட்டது. அதற்குப் பின் அவர் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லையென்றாலும் மலையாளம், இந்திப் படங்களில் நடித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்த '2 ஸ்டேட்ஸ்' படத்திலும் அலியா பட்டுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கில் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'அனுக்ஷனம்' படம் இன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரேவதியின் கதாபாத்திரம் பேசப்படும் கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார்கள். ஆனால், தமிழில் மட்டும் அவர் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அவராகவே தவிர்க்கிறாரா அல்லது யாரும் அழைக்கவில்லையா என்றும் தெரியவில்லை. அல்லது அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் சரண்யாவின் அலையால் மற்ற நடிகைகளால் ஈடு கொடுக்க முடியவில்லையா என்றும் பேச்சு எழுகிறது.
சாவித்ரிக்கு அடுத்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து அவருக்கடுத்தவர் ரேவதி தான் என்ற பெயரைப் பெற்றவர் தமிழிலும் தற்போது சாதிக்க முடியாதா என்ன? தமிழிப் படங்களைத் தவிர்க்கும் காரணத்தை அவர்தான் சொல்ல வேண்டும்.