Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் 'மைனா' கூட்டணி...?

13 செப், 2014 - 10:21 IST
எழுத்தின் அளவு:

'மைனா' படம் மூலம் சிறந்த படங்களைத் தரும் இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெற்றவர் பிரபு சாலமன். தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'கும்கி' படமும் வசூல் ரீதியாகவும், படத்தின் தரத்திலும் அடுத்த கட்டத்தை அடைந்து அவருக்கு மேலும் ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது. விரைவில் அவரது இயக்கத்தில் 'கயல்' படம் வெளிவர உள்ளது.


'மைனா' படத்தில் விதார்த், 'கும்கி' படத்தில் விக்ரம் பிரபு ஆகியோரை நாயககர்களாக அறிமுகப்படுத்தியதைப் போல 'கயல்' படத்திலும் சந்திரன் என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறார். பெரிய நட்சத்திரங்களை வைத்து இயக்கும் போது அந்தப் படம் வெற்றி பெற்றால் அதிக பட்சப் புகழ் அவர்களுக்குப் போய்விடும். அதே சமயம் புதுமுகங்களை வைத்து இயக்கி வெற்றி பெறும் இயக்குனர்களுக்குத்தான் மொத்தப் புகழும் போய்ச் சேரும்.


அந்த விதத்தில் 'கயல்' படம் மூலமும் பிரபு சாலமன் மேலும் ஒரு கட்டத்திற்கு பயணமாவார் என்கிறார்கள். அப்படித்தான் மொத்த படமும் உருவாக்கப்பட்டுள்ளதாம். முந்தைய படங்களைப் போலவே 'கயல்' படமும் தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமானப் பதிவாக இருக்கும் என்கிறார்கள். இந்தப் படத்தையடுத்து பிரபு சாலமன் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் சொன்ன கதையைக் கேட்ட உதயநிதி கண்டிப்பாக செய்வோம் என்று சொல்லியிருக்கிறாராம். 'மைனா' படத்தை வாங்கி வெளியிட்டு அதை இந்த அளவிற்கு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.


மீண்டும் உதயநிதி, பிரபு சாலமன் கூட்டணியில் உருவாக உள்ள அந்தப் படத்தில் புதுமுகம்தான் ஹீரோவா என்பதும், படம் எதைப் பற்றிய கதை என்பதும் 'கயல்' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அறிவிக்கப்படும் என்கிறார்கள். தொடர்ந்து கிராமத்துப் பக்கமும், மலைப் பிரதேசத்திலும் பயணித்த பிரபு சாலமன் அடுத்த படத்தில் நகர்ப்புறம் பயணிக்க இருக்கிறார் என்று மட்டும் தகவல் கசிந்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in