பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரவி.கே.சந்திரன், நட்ராஜ், ஆர்.டி.ராஜசேகர், மணிகண்டன் உள்பட பல தமிழ் ஒளிப்பதிவாளர்கள் பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருக்கிறார் மனுஷ் நந்தன். இவர் ரவி.கே.சந்திரனின் உதவியாளர். ஷாருக்கான் தற்போது நடித்து வரும் ஹேப்பி நியூ ஈயர் படத்தின் கேமராமேன் இவர்தான்.
ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்த அத்தனை இந்திப் படத்திலும் மனுஷ் நந்தன் பணியாற்றியுள்ளார். அதனால் இந்தி ஹீரோக்கள் அனைவருக்கும் மனுஷைத் தெரியும். அந்த அடிப்படையில் ஹேப்பி நியூ ஈயர் வாய்ப்பு வந்திருக்கிறது. ரவி.கே.சந்திரன் இயக்கும் தமிழ் படமான யான் ஒளிப்பதிவாளரும் மனுஷ்தான்.
தனது இந்திப் பட வாய்ப்பு பற்றி மனுஷ் நந்தன் கூறியதாவது: 2014ம் ஆண்டின் பெரிய பாலிவுட் படம் ஹேப்பி நியூ ஈயர், ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிக்கிறாங்க. ஓம் சாந்தி ஓம் இயக்குனர் ஃபரா கான் டைரக்ட் செய்கிறார். இவ்வளவு பெரிய படத்தை என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண்போகாமல் காப்பாற்றி இருக்கிறேன்.
கேமராமேனாக ஜெயிக்க வேண்டும் என்பதுதான் கனவு, கேமராவும், லென்சும் கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி என்னோடு ஒட்டிப் பிறந்ததாகவே நினைச்சுக்குவேன். சென்னை சூளைமேட்டில்தான் கேமரா பற்றி படிச்சேன். அப்புறம் ஒரு பத்திரிகையில போட்டோகிராபரா வேலை பார்த்தேன். அப்புறம் ரவி.கே.சந்திரன் சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். அவரோட இந்திப் படங்கள்ல வேலை பார்க்குற வாய்ப்பு கிடைச்சுது. அந்த அனுபவம்தான் இந்த இடத்துல என்னை நிறுத்தியிருக்கு. அடுத்தும் இரண்டு இந்தி பட வாய்ப்புகள் வந்திருக்கு. ஆனாலும் வருடத்திற்கு ஒரு தமிழ் படத்திலாவது வேலை செய்வேன் என்கிறார் மனுஷ் நந்தன்.