பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஸ்டான்லிஜோஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வரும் படம் நீதானா அந்த குயில். "இது ஒரு கிராமத்து முக்கோண காதல் கதை. கிராமத்து பெண் பவளம் தன் முறைமாமன் முத்துவை காதலிக்கிறார். அவரே உலகம் என்று வாழ்கிறார். முத்து டூரிஸ்ட் கைடாக வேலை செய்கிறார். சுற்றுலா வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகுகிறான் முத்து. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அடுத்தடுத்து நடக்கும் பரபரப்பு திருப்பங்களுடன் படத்தை இயக்கி இருக்கிறேன். முழு படமும் திருநெல்வேலியை சுற்றி படமாக்கப்பட்டுள்ளது" என்கிறார் இயக்குனர் ஸ்டான்லி ஜோஸ்.
இதில் சாகர் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி கிருஷ்ணா, ஸ்ரேயோஜோஸ் ஹீரோயினாக நடிக்கிறார்கள். கிருஷ்ணபிரசாத் துவாரகா இசை அமைக்கிறார். ரஞ்சித் ரவி ஒளிப்பதிவு செய்கிறார், பொண்ணு பிலிம்ஸ் சார்பில் குஞ்ஞய்யன், ராஜ்மார்த்தாண்டம் தயாரிக்கிறார்கள். அனைவருமே புதுமுகங்கள்.