Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 20 கோடிக்கு விலைபோனது!

12 செப், 2014 - 12:55 IST
எழுத்தின் அளவு:

தல 55 படத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் வரும் புதிய புதிய தகவல்கள். அதனால் அப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தினமும் எகிறிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளிக்கும், படம் பொங்கலுக்கும் வெளிவரும் என சில நாட்களுக்கு முன்புவரை செய்திகள் அடிபட்டன. அந்தத் திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் தென்படுகிறன்றன.


என்ன மாற்றங்கள்? படத்தின் பாடல்களை நவம்பர் மாதமும், படத்தை டிசம்பரிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இசை வெளியீட்டிற்கு சில தினங்களுக்கு முன்புதான் படத்தின் டைட்டில் என்ன என்பதை வெளியே சொல்ல இருக்கின்றனர். தல 55 படத்திற்கான தலைப்பு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு தற்போது ரெடியாக இருப்பதாகவும், ஆனால் அதை இப்போதைக்கு வெளியிடும் திட்டம் இல்லை என்றும் கூறி வருகிறாராம் கௌதம் வாசுதேவ் மேனன்.


சத்யா, சத்யதேவ் போன்ற தலைப்புகள் நீண்ட நாட்களாகவே ஊடகங்களில் அடிபட்டு வருகின்றன.


இதுகுறித்து கௌதம் வாசுதேவ் மேனனிடம் கேட்டால், சத்தியமாக இவ்விரு தலைப்புகளையும் பரிசிலிக்கவே இல்லை என்ற மறுத்திருக்கிறார். மங்காத்தா, ஆரம்பம், வீரம் என கடந்த சில படங்களாக மாஸ் அஜித்தை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இப்படத்தில் வரும் ரொமான்டிக் அஜித் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் என்றும் தல 55 படக்குழுவில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். இந்த படத்தைப் பற்றி லேட்டஸ்ட் தகவல்... படத்தின் சாட்டிலைட் உரிமையை 20 கோடி ரூபாய்க்கு ஒரு டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in