பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சித்தார்த் - சமந்தா இருவரும், ஒரேயொரு தெலுங்கு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போதிலிருந்தே, அவர்களை இணைத்து, காதல் செய்திகள் புகையத் துவங்கிவிட்டது. இருப்பினும், அந்த செய்திகளை இருவருமே, தொடர்ந்து மறுத்து வருகின்றனர். சமீபத்தில், சித்தார்த் நடித்த ஒரு படத்தின் ஆடியோ விழாவில், சமந்தா கலந்து கொண்டார்.அப்போது சித்தார்த் பற்றி, அவர் பேசும்போது, சித்தார்த், படத்திற்கு படம் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். தன்னை, ஒரு கதை வெகுவாக பாதித்து விட்டால், அந்த படத்தில் எப்படியேனும் நடித்து விடுவார். அவரிடம், எப்போது பேசினாலும், சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அவரது பேச்சு, மூச்சு எல்லாமே சினிமா தான். சித்தார்த்தை, ஒரு சினிமா பைத்தியம் என்று கூட சொல்லலாம் என்கிறார் சமந்தா.