Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜீவா வழக்கமான ஸ்போர்ட்ஸ் படமல்ல: சுசீந்திரன்

11 செப், 2014 - 14:33 IST
எழுத்தின் அளவு:

வெண்ணிலா கபடி குழுவில் கபடி விளையாட்டின் மறுமுகத்தை காட்டிய சுசீந்திரன். அதே விஷ்ணுவை வைத்து கிரிக்கெட்டின் இன்னொரு முகத்தை காட்டும் படம் ஜீவா. ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. படத்தை பற்றி சுசீந்திரன் தரும் முன்னோட்டம் இது...:

இந்த கதையை நான் எழுதி முடித்த உடனேயே இந்த ஷாட் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த சீன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டுத்தான் ஷூட்டிங்கிற்கே போனேன். எடுத்த 70 சீனில் ஒன்று கூட வீண் இல்லை. எடிட்டருக்கும் அதிக வேலை வைக்கவில்லை.


இது வழக்கமான ஸ்போர்ட்ஸ் படமல்ல. கடைசி ரன் கடைசி பால், என்கிற பரபரப்பெல்லாம் படத்தில் இருக்காது. ஒரு விளையாட்டு வீரனோட உணர்வுதான் படம். அவனது அவமானங்கள், தோல்விகள் வெற்றிக்கு அவன் கொடுக்கும் விலைகள்தான் படம். இந்த படத்துக்கு பிறகு கிரிக்கெட் விளையாட கிளம்பும் மகனை எல்லா பெற்றோரும் சந்தோஷமாக அனுப்பி வைப்பாங்க. அப்படி ஒரு உணர்வை படம் கொடுக்கும்.


விஷ்ணு அடிப்படையிலேயே கிரிக்கெட் பிளேயர்ங்றதால பயிற்சி, ரிகல்சல், ஹோம் ஒர்க் எதுவும் இல்லாம இயல்பா ஷூட் பண்ணி முடிச்சிட்டோம். "இதுக்கு பிறகு இப்படி ஒரு படம் எனக்கு கிடைக்கும்னு தோணலை சார்" என்றார் விஷ்ணு. அவரது அப்பா சினிமா விஷயத்தில் தலையிட மாட்டார் அவரே "இது என் மகனோட வாழ்நாள் படம்" என்கிறார். இதே உணர்வை ரசிகர்களும் பெறுவார்கள். என்கிறார் சுசீந்திரன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in