Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிஷ்யன் படத்தை வாங்கினார் ஷங்கர்!

10 செப், 2014 - 15:14 IST
எழுத்தின் அளவு:

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் சிவாஜி, எந்திரன் படங்களில் உதவியாளராக பணியாற்றிவர் கார்த்திக் ஜி.கிரிஷ். இவர் தற்போது கப்பல் என்ற படத்தை தனியாக இயக்கி உள்ளார். இதில் வைபவ், சோனம் பஜ்வா, கருணாகரன், விடிவி.கணேஷ், நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐ ஸ்டூடியோ எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் 8 நண்பர்கள் இணைந்து இதனை தயாரித்துள்ளார்கள். படம் முடிந்தது ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தை இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.


இதுகுறித்து படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறியதாவது: படம் முடிந்ததும் அதனை எனது குரு ஷங்கர் சாருக்கு போட்டுக்காட்ட ஆசை. ஆனால் அவர் ஐ படத்தில் பிசியாக இருந்ததால் முடியவில்லை. இருந்தாலும் பாட்டையாவது போட்டுக் காட்டலாம் என்று முடிவு செய்து அவரிடம் நேரம் வாங்கி போட்டுக்காட்டினேன். பாடல்கள் அவருக்கு பிடித்துப்போக படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்தார். உடனேயே படத்தையும் போட்டுக் காட்டினேன். படத்தை பார்த்த அவர் "நான் ரொம்ப ரசிச்சு பார்த்தேன். ரியாலிட்டி காமெடியா வந்திருக்கு. படம் பிசினசாயிடுச்சா?"ன்னு கேட்டார். ஒருத்தர் வாங்க விருப்பத்தோடு இருக்கார்னு சொன்னேன். "நான் வாங்கிக்கட்டுமா?" என்றார். சந்தோஷம் தாங்க முடியவில்லை. எதுவுமே பேசாமல் அவர் கையில் படத்தை கொடுத்துவிட்டேன். என்றார் கார்த்திக்.


செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்தில் படத்தை வெளியிடுகிறார் ஷங்கர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in