டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அஜய் தேவ்கன் நடித்த ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட இப்படம், தற்போது டிசம்பர் 5ம் தேதி வெளியிடப்பட உள்ளதாம். ஆக்ஷன் ஜாக்சன் வெளியான பிறகே அமீர்கானின் பிகே படம் ரிலீசாக உள்ளதால், எவ்வித போட்டியும் இன்றி ஆக்ஷன் ஜாக்சன் திரைக்கு வர உள்ளதாம்.
ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படம் வெளியிடப்பட்ட 3 வாரங்களுக்கு பிறகே இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் தியேட்டர் கிடைப்பதிலும் பெரிய அளவில் பிரச்னை இருக்காது என்றே கூறப்படுகிறது. ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதால் இந்த 3 முன்னறி நடிகர்களின் படங்களுக்கிடையே பெரிய அளவில் போட்டியை ஏற்படுத்தாது என்றே கூறலாம். எந்த போட்டியும் இல்லாமல் ஆக்ஷன் ஜாகசன் படத்தை வெகு நாட்களுக்கு ஓட செய்வதற்காக பட தயாரிப்பாளர் இந்த யுக்தியை மேற்கொண்டுள்ளாராம்.
இரோஸ் இன்டர்நேஷனல் பேனர் நிறுவனர் தயாரிக்கும் ஆக்ஷன் ஜாக்சன் படத்தை பிரபு தேவா இயக்கி உள்ளார். ஆக்ஷை குமார், சல்மான் கான், அமீர்கான் என பல முன்னணி நடிகர்களின் படங்களுடன் போட்டி போட்டு வந்த ஆக்ஷன் ஜாக்சன் படம், தற்போது எவ்வித போட்டியும் இன்றி தனித்து களத்தில் இறங்க உள்ளது.