சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கிக் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது தனது புதிய படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார், சல்மான் கான். பொதுவாகவே சல்மான் கான், தனது அனைத்து படங்களிலும் கடின உழைப்பை வெளிப்படுத்துபவராக இருந்தாலும், தனது புதிய பட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம்.
அஜீஸ் பாஸ்மியின் நோ என்ட்ரி படத்தில் தனது முழு கவனத்தை செலுத்தி உள்ள சல்மான் கான், இந்த படத்தின் தேவைக்கு ஏற்ப தனது தோற்றத்தில் மாற்ற செய்யும் பணிகளில் இறங்கி உள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய படத்தையும் மெகா ஹிட்டாக்க எந்த மாதிரி விஷயங்களை படத்தில் சேர்க்கலாம் என்பது குறித்து பாபா சித்திக் அளித்த இப்தார் விருந்தில் கலந்து கொண்ட போது சல்மானும், அனீசும் வெக நேரம் விவாதித்து கொண்டனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த புதிய படத்தின் வேலைகள் துவங்க உள்ளதை அனீஸ் உறுதி செய்துள்ளாராம். அத்துடன் இந்த படத்தில் சல்மான் கான், அனைவரையும் கவரும் விதமான இரு மாறுபட்ட வேடங்களில் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளாராம்.