தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமீர்கான் நடித்து வெளிவர இருக்கும் படம் பிகே. இந்த படத்திற்காக அமீர்கான் அளித்த நிர்வாண போஸ்டர், பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது தொடர்பாக அமீர்கான் மீதும், பிகே படக்குழுவினர் மீதும் பல்வேறு வழக்குகள் போடப்பட்டது.
பிகே படத்திற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட 2 போஸ்டர்களுமே சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 3வது போஸ்டர் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளதாம். இந்த படத்திற்காக மொத்தம் 8 போஸ்டர்களை வெளியிட பிகே படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போஸ்டர்கள், டிசம்பர் 19ம் தேதி வெளியாக உள்ள பிகே படத்தை ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதுடன், படத்தை ஹிட்டாக்கவும் உதவும் என பிகே படக்குழுவினர் நினைத்துள்ளனராம்.
தண்டவாளத்தின் மீது நிர்வாணமாக, டேப்ரிக்கார்டரை மறைத்தபடி அமீர்கான் நிற்பது போன்று முதலில் வெளியிடப்பட்ட போஸ்டர் பற்றிய சர்ச்சை அடங்குவதற்குள், பாரம்பரிய ராஜஸ்தானி உடையில், இசைக்கருவி வாசிப்பது போன்று வெளியிடப்பட்ட அமீர்கானின் போஸ்டரும் சர்ச்சையாக்கப்பட்டது. முதல் இரண்டு போஸ்டர்களும் படத்தின் இருவேறுபட்ட பரிமாணங்களை வெளிப்படுத்தியதைப் போன்று 3வது போஸ்டரும் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில விஷயங்களை கூறுவதாக இருக்கும் என படக்குழுவினர் கூறி வருகிறார்களாம்.