சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
சமீபத்தில் வெளியான ஏர்டெல் விளம்பரத்தில், ஒரு நிறுவனத்தின் பாஸ் மற்றும் மனைவி ரோலில் நடித்தவர் மதுரிமா துலி, நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த விளம்பரம், மதுரிமாவுக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அக்ஷ்ய் குமார் அடுத்து நடிக்கவுள்ள த்ரில்லர் படமான பேபியில், மதுரிமாவும் அக்ஷ்ய் குமாருடன் ஜோடி சேர இருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்திற்காக பல்வேறு நடிகைளை வைத்து நேர்முக தேர்வு நடத்தியுள்ளார் இயக்குநர் பங்கஜ் பாண்டே. அதில் மதுரிமா தான் தேர்வாகியுள்ளார். மேலும் இந்தப்படத்தில் அக்ஷ்ய் குமாருடன் ஒரு புதுமுக நடிகையை நடிக்க வைக்க எண்ணினார் பங்கஜ், அதன்படி மதுரிமா தான் அக்ஷ்ய்க்கு பொருத்தமாக இருப்பார் என்று எண்ணி அவரையே தேர்வு செய்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தில் வெள்ளாவி பொண்ணு டாப்சியும் நடிக்க கமிட்டாகியுள்ளார். கணவன் - மனைவிக்கு இடையேய ஒரு அழகான காதல் கதையுடன், த்ரில்லர் படமாகவும் இப்படம் உருவாக இருக்கிறது. இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதால் அக்ஷ்ய் குமாரின் மனைவியாக நடிக்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் இந்தியா தவிர்த்து அபுதாபி, இஸ்தான்புல், காத்மாண்டு, ஓமன் போன்ற நாடுகளிலும் படமாக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே மதுரிமா சம்பந்தப்பட்ட காட்சிகள் டில்லியில் படமாக்கப்பட்டு வருகிறது.