Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டின் மொட்டை தலை ஹீரோயின்கள்...! ஸ்பெஷல் ஸ்டோரி!!

10 செப், 2014 - 00:13 IST
எழுத்தின் அளவு:

உலகளவில் மிகவும் பிரபலமானது பாலிவுட் சினிமா. இதற்கு இங்குள்ள ஹீரோக்கள் மட்டுமல்ல, ஹீரோயின்களும் தான். படத்திற்காக எப்படிப்பட்ட ரோலிலும் நடிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் பாலிவுட் ஹீரோயின்கள், அழகை மட்டும் பெரிதாக நம்பாமல் தங்களது கேரக்டருக்காக எப்படிப்பட்ட வேடத்திலும் நடிப்பார்கள், ஏன் தங்களது முடியை கூட எடுத்துவிட்டு மொட்டைத்தலையுடனும், மொட்டை தலை போன்ற மேக்கப் போட்டும் நடித்த நடிகைகள் பலர் உள்ளனர். அப்படி நடித்த நடிகைகளை பற்றி தான் இப்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ப்ரியங்கா சோப்ரா


பாலிவுட்டில் லேட்டஸ்ட்டாக மொட்டை தலை போன்ற கெட்டப்பில் நடித்தவர் ப்ரியங்கா சோப்ரா. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள மேரி கோம் படத்தில் தான் ப்ரியங்கா சோப்ரா மொட்டை தலை போன்ற கெட்டப்பில் நடித்து இருந்தார். உண்மையில் அவர் மொட்டை போடவில்லை என்றாலும் மேக்கப் போட்டு அந்த தோற்றத்தில் நடித்தார். நடிக்க வந்த பின்னர் என்ன தேவையோ அதில் நடிப்பது நமது கடமை, அதனால் நான் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் கூறியது இல்லை, கூறவும் மாட்டேன் என்கிறார்.


ஷில்பா ஷெட்டி

பாலிவுட்டின் எவர்கிரீன் நடிகைகளில் ஷில்பா ஷெட்டியும் ஒருவர். இவரும் மொட்டை தலை தோற்றத்தில் நடித்து இருக்கிறார். 2010-ம் ஆண்டு வெளிவந்த டிசையர் என்ற படத்தில் தான் மொட்டை தலையாக நடித்தார் ஷில்பா. இவரும் மெக்கப்போட்டு தான் நடித்துள்ளார். இந்த மாதிரி நடித்தது பற்றி ஷில்பா ஷெட்டி கூறுகையில், மொட்டை தலை தோற்றத்திற்காக நான் 3 முதல் 4 மணி நேரம் வரை மேக்கப் போட்டேன், அப்படி கஷ்டப்பட்டு நடித்த அந்தப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை, இருந்தாலும் அப்போது எனது அந்த தோற்றம் பேசப்பட்டது என்று கூறியுள்ளார்.

அந்தாரா மலி

பாலிவுட்டின் மிகவும் அழகான நடிகைகளில் அந்தாரா மலியும் ஒருவர். 2010-ம் ஆண்டு அமோல் பலேகர் இயக்கிய அண்ட் ஒன்ஸ் அகைன் என்ற படத்தில், புத்த துறவி கேரக்டருக்காக தனது நீண்ட கூந்தலை எடுத்துவிட்டு மொட்டை தலையுடன் நடித்தார். ஆனால் இந்தப்படம் அந்தாராவுக்கு தோல்வி படமாக அமைந்துவிட்டது. மேலும் இந்தப்படத்திற்கு பிறகு அவருக்கு வேறு படங்களும் அமையவில்லை. இருந்தாலும், படத்தில் அந்தாராவின் கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது.

ஷபானா ஆஸ்மி

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் இவரும் ஒருவர். இவரும் தீபா மேத்தா இயக்கிய வாட்டர் படத்திற்காக மொட்டை தலையுடன் நடித்தார். ஆனால் சில அரசியல் பிரச்னைகளால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. பிறகு 2005-ம் ஆண்டு இந்தப்படம் மீண்டும் புத்துயிர் பெற்றது, ஆனால் படத்தில் ஷபானாவுக்கு பதில் சீமா பிஸ்வாஸ் நடித்தார். இருந்தாலும் ஷபானா ஆஸ்மி இப்படத்திற்காக மொட்டை போட்டது பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தில் விதவை பெண்ணாக ஷபானா ஆஸ்மி நடித்து இருந்தார்.

நந்திதா தாஸ்


விதவைகளின் அவலநிலையை பற்றி தீபா மேத்தா இயக்கிய படத்தில் ஷபானா ஆஸ்மியுடன், நந்திதா தாஸூம் நடித்து இருந்தார். இப்படத்திற்காக தனது நீண்ட கூந்தலை இழந்தார் நந்திதா. இத்தனைக்கும் இந்தப்படத்தில் நந்திதா வெறும் குணச்சித்திர ரோலில் தான் நடித்தார், இருந்தாலும் அந்த வேடத்திற்கே மொட்டை போட்டு நடித்தார். நந்திதா தாஸ்க்கு எவ்வளவு பெரிய நீளமான தலைமுடி என்று அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் அந்தப்படத்தில் அவர் மொட்டை தலையுடன் நடித்தது அனைவருக்கும் அதிர்ச்சியையும், அதேசமயம் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

இப்படி பல நடிகைகள் தாங்கள் ஏற்று நடிக்கும் வேடத்திற்காக மொட்டை தலையுடன் நடித்துள்ளனர், இப்படி அவர்கள் கஷ்டப்பட்டு நடித்தபோதும் எல்லோருக்கும் வெற்றி கிடைத்ததா என்றால் அதற்கு விடை, இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் ஹீரோக்களுக்கு இணையாக தங்களாலும் எப்படிப்பட்ட ரோலிலும் நடிக்க முடியும் என்பதை பாலிவுட் நடிகைகள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in