பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சித்தார்த் நடித்துள்ள எனக்குள் ஒருவன் படத்தின் ஆடியோ விழா நேற்று சிறப்பாக நடந்தது. இவ்விழாவில் பேசியவர்கள், 30 வருடத்திற்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான அதே டைட்டீலில் இப்போது சித்தார்த் நடித்திருக்கிறார். ஜூனியர் கமலான சித்தார்த்தே இந்த டைட்டீலில் நடிக்க பொருத்தமானவர் என்றனர்.
அதோடு, அந்த படக்குழுவினர் பேசுகையில், ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு விதமான பாணி இருக்கிறது.அந்த வகையில், சித்தார்த் என்றால் இப்படித்தான் நடிப்பார் என்றும் கருதுவார்கள். ஆனால் அவற்றையெல்லாம் உடைத்தெறியும் வகையில் இந்த படத்தில் சித்தார்த்தால் வேறுவிதமாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நடித்துள்ளார்.
அதையடுத்து, சித்தார்த்தின் அபிமானத்திற்குரிய நடிகையான சமந்தா பேசுகையில், சித்தார்த் எப்போதுமே சினிமாவைப்பற்றியே யோசிக்கக்கூடியவர். அதைப்பற்றியே முழுநேரமும் பேசிக்கொண்டிருப்பார். அந்தவகையில் அவர் ஒரு சினிமா பைத்தியம். அப்படிப்பட்டவர் ஒரு கதையில் நான்தான் நடிப்பேன் என்று இவ்வளவு ஈடுபாடு காட்டியிருக்கிறார் என்றால், கண்டிப்பாக இந்த படத்தில் ஒரு வித்தியாசமான சித்தார்த்தை பார்க்கலாம் என்றார்.