இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் பிரபல நடிகை ராணி முகர்ஜி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த மர்தானி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ராணி முகர்ஜி. இந்நிலையில், சமீபத்தில் இப்படம் தொடர்பான புரொமோஷனுக்காக டில்லி வந்திருந்தார் ராணி முகர்ஜி. ஆனால் இந்த புரொமோஷன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லையாம். இதுப்பற்றி விசாரித்ததில், ராணி முகர்ஜி பங்கேற்ற புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பெரிய புகைப்பட கலைஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாம். இதனால் மற்ற புகைப்பட கலைஞர்கள் யாரையும் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதனால் ராணி முகர்ஜியை டில்லி புகைப்பட கலைஞர்கள் புறக்கணித்துவிட்டனர். சமீபகாலமாக, புகைப்பட கலைஞர்கள், பாலிவுட் நட்சத்திரங்களை புறக்கணிப்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சல்மான் கான், சாராதா கபூர், கங்கனா ரணாவத் போன்ற நட்சத்திரங்களை மும்பை புகைப்பட கலைஞர்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.