Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் அட்லீக்கு திருமணம்: சின்னத்திரை நடிகை ப்ரியாவை மணக்கிறார்

08 செப், 2014 - 11:11 IST
எழுத்தின் அளவு:

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜா ராணி படத்தை இயக்கியவர் அட்லீ. ஷங்கரின் உதவியாளராக இருந்து இயக்குனரானவர். ஒரு படத்திலேயே உயரத்திற்கு சென்றவர். ஒரு ஹிட்டுக்கு பிறகு திருமணம் என்கிற அறிமுக இயக்குனர்கள் பாணியில் அட்லீயும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.


அவர் மணக்க இருப்பது சின்னத்திரை நடிகை ப்ரியாவை. ப்ரியா சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். அதோடு சிங்கம், சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவின் தங்கையாகவும், நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தங்கையாவும் நடித்துள்ளார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். பல வருடங்களாக காதலித்து வந்த அட்லீயும், ப்ரியாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.


இதுகுறித்து அட்லீ கூறியதாவது: நான் எனது நிஜ ராணியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். ப்ரியாவை கடந்த 8 வருடங்களாக அறிவேன். நண்பர்களாக இருந்தோம், இப்போது காதலிக்கிறோம். நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நவம்பர் மாதம் திருமணம் நடக்கிறது என்கிறார் அட்லீ.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in