வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இதுவரை 7 படங்களில் நடித்துள்ள விஜயசேதுபதியின் கையில் தற்போது 7 படங்கள் உள்ளன. இது தவிரவும் பல கதைகளில் நடிக்க ஓ.கே செய்து வைத்திருக்கிறார். அந்த வகையில், வருகிற 2017ம் ஆண்டு வரை அவரது கால்சீட் டைரி புல்லாகி விட்டதாம். அதனால்தான் புதிய கதைகளை இப்போதைக்கு கேட்பதாக இல்லை என சமீபத்தில் தெரிவித்துள்ளார் அவர்.
இந்த நிலையில், இதுவரை முன்னணி ஹீரோக்கள் படங்கள் ரிலீசாகும்போது விஜயசேதுபதி நடித்த படங்கள் ரிலீசாகாமல் இருந்தது. ஆனால், இப்போது அவருக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவாகி விட்டதால் அவரும் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் ரிலீசாகும்போது தனது படங்களையும் களத்தில் இறக்கி விட தயாராகி விட்டார்.
அந்த வகையில், செப்டம்பர் 26-ந்தேதி கார்த்தி நடிப்பில் வெளியாகயிருக்கும் மெட்ராஸ் படத்துக்கு போட்டியாக தனது வன்மம் படத்தை வெளியிடுகிறார், விஜயசேதுபதி. இதனால் கார்த்தி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. காரணம், சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், மெட்ராஸ் படத்தை யாருமே இல்லாத களத்தில் இறக்கி விட்டு வெற்றியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் கார்த்தி. ஆனால் இந்த நேரம் பார்த்து விஜயசேதுபதி படமும் திரைக்கு வருவதால், போட்டியை எதிர்கொள்ள கார்த்தி தரப்பும் தற்போது ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.