'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ஐ. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்குவார்ஷியாக்கரை அழைப்பதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று ஆடியோ விழாவிற்கு வர அர்னால்ட் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ஓகே சொன்ன அர்னால்ட், தனது வாழ்த்துடனான வீடியோ ஒன்றையும் ஷங்கருக்கு அனுப்பி உள்ளாராம். அதில், ஹலோ இந்தியா, ஐ படத்தை தயாரித்த டைரக்டர் ஷங்கருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரம்மாண்ட விசுவல் எபெக்ட்சுடன் வித்தியாசமான முறையில் ஐ படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐ படத்தின் இந்த பிரம்மாண்ட ஆடியோ விழாவில் நானும் கலந்து கொள்ள இந்தியா வர உள்ளேன். ரசிகர்கள் அனைவரையும் அங்கு காண நான் ஆவலாக உள்ளேன். விழா நடைபெறும் செப்டம்பர் 15 அன்று நான் சென்னையில் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய பட்ஜெட்டில் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்த படம் கடந்த 2 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக அனிருத் இசையில் ஆல்பம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.