பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் நடிகை பிபாசா பாசு நடிப்பில் வெளிவர இருக்கும் படம் கிரியேசர் 3டி. இந்த படத்திற்கு யுஏ தரச்சான்று கிடைத்துள்ளதற்கு பிபாசா பாசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கிரியேசர் 3டி படம் பற்றி பிபாசா பாசு தனது டுவிட்டரில், கியேசர் 3டி படத்திற்கு யுஏ சான்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் இந்த படத்தை குழந்தைகள் தங்களின் பெற்றோருடன் சென்று அவசியம் பார்க்க வேண்டும். இந்த படம் அவர்கள் என்ஜாய் செய்யும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
விக்ரம் பாத் இயக்கி உள்ள த்ரில்லர் படமான கிரியேசர் 3டி செப்டம்பர் 12ம் தேதி ரிலீசாக உள்ளது. இதனால் இந்த படத்தை ப்ரமோட் செய்யும் தீவிரமாக இறங்கி உள்ளார் படத்தின் ஹீரோயினான பிபாசா பாசு.
படத்தை ப்ரமோட் செய்வதற்காக துபாயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார். பிபாசா பாசு நடிக்கும் காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் படப்பிடிப்பும் துபாயில் தான் நடத்தப்பட்டு வருகிறதாம்.