‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல பாலிவுட் நடிகை, மல்லிகா ஷெராவத் நடித்து, விரைவில் திரைக்கு வரவுள்ள, டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற திரைப்படத்தின் விளம்பர போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இதில், மூவர்ணக் கொடியை போர்த்தியவாறு, சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டு உள்ள காரில் மல்லிகா அமர்ந்துள்ளது போன்று காணப்படுகிறது.தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் அவர், போஸ் கொடுத்துள்ளதாக கூறி, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இருவர், கரீம்நகர் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.கடந்த மாதம், தேசியக் கொடி மற்றும் தெலுங்கானா மாநில சின்னம் ஆகியவற்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக, மல்லிகா ஷெராவத் மீது வழக்குத் தொடரப்பட்டது.
மல்லிகா ஷெராவத் மீது தெலுங்கானா மாநில அரசு பதிவு செய்துள்ள 2வது வழக்கு இதுவாகும். உள்ளூர் கோர்ட்டின் உத்தரவின் பேரில் மல்லிகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த வழக்கு தொடர்பாக ஐதராபாத் ஐகோர்ட் சார்பில் மத்திய அரசுக்கும், நடிகை மல்லிகா ஷெராவத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.