Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் செருப்பு நடனம்!

05 செப், 2014 - 15:06 IST
எழுத்தின் அளவு:

விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர் ஸ்ரீதர். பரத் நடித்த 4 ஸ்டூடன்ஸ் என்ற படத்திற்காக அவர் நடனம் அமைத்த லட்சாவதியே என்ற பாடல்தான் இவருக்கு தமிழ்., மலையாளத்தில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து, தமிழில் நகுல் நடித்த காதலில் விழுந்தேன் படப்பாடலான நாக்குமுக்க இவரை பட்டிதொட்டியெங்கும் பேச வைத்தது.

அதனால் இப்போது தென்னிந்திய சினிமாவில் பேசப்படும் நடன மாஸ்டராகி விட்டார் ஸ்ரீதர். இந்நிலையில், பிரபுதேவாவுக்கு பிடித்தமான நடன மாஸ்டர்களில் ஒருவரான ஸ்ரீதருக்கும் அவரைப்போலவே படம் இயக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்தபோதும், தற்போது போக்கிரி மன்னன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.


இப்படத்தின் ஆடியோ விழா இன்று காலை 10 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில், தயாரிப்பாளர் எஸ்.தாணு, ரைடக்டர் ராஜ்கபூர், நடிகர் சாந்தனு, ஸ்ரீமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் மாஸ்டர் ஸ்ரீதர் பேசுகையில், எனக்கு மனதளவில் டைரக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தபோதும், ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையில் தேடி வரும் எதையும் விடக்கூடாது. அதை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறேன்.


அதோடு, நடன மாஸ்டரான நான் ஹீரோவாக நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால, வித்தியாசமான நடன அசைவுகளை கொடுத்துள்ளேன். இதுவரை விஜய் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு நடனம் அமைக்கும்போது அவர்களுக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு கம்போஸ் செய்திருக்கிறேன். ஆனால் இந்தப்படத்தை பொறுத்தவரை என்மீது ரசிகர்களுக்கு நடனம் ஒன்றே எதிர்பார்ப்பாக இருக்கும் என்பதால், புதுமையான ரிஸ்க்கான சில அசைவுகளை கொடுத்திருக்கிறேன்.


அந்த வகையில், ஒரு பாடல் காட்சியில் காலில் போட வேண்டிய செருப்பை கைகளில் அணிந்தபடி நடனமாடியிருக்கிறேன். இந்த மாதிரி பிரபல ஹீரோக்கள் ஆட தயங்குவார்கள் என்பதால் அந்த முயற்சியை முதன்முதலாக நானே எடுத்திருக்கிறேன். இது கண்டிப்பாக பேசும்படியாக இருக்கும் என்று சொன்ன ஸ்ரீதர், இப்போது ஹீரோவாகி விட்ட எனக்கு எதிர்காலத்தில் இயக்குனா ஆகவேண்டும் என்பது தான் லட்சியமே. அதேசமயம் நடனம் என்பதுதான் எனக்கான அடையாளம் என்பதால் அதை உயிராக மதித்து தொடர்ந்து இந்த சினிமாவில் நடன மாஸ்டராகவும் இயங்கிக் கொண்டிருப்பேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in