'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஞ்சான் படத்தின் தோல்வியினால் கடும் அப்ஸெட்டில் இருந்த சூர்யா, வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார். ஒருவழியாக மனசை தேற்றிக் கொண்டு தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் சூர்யா. நயன்தாரா, எமி ஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் மாஸ் படத்தில் பிரேம்ஜி அமரன், ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான சென்னை - 600028 படம் தொடங்கி பிரியாணி படம் வரை அவரது அனைத்து படங்களுக்கும் இசையமைத்த யுவன்சங்கர்ராஜாவே இந்தப்படத்துக்கம் இசையமைக்கிறார். வெங்கட்பிரபு- யுவன்சங்கர்ராஜா இணையும் 6 ஆவது படம் இது. சூர்யா பங்குதாரராக உள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் இது என்பதால், மாஸ் படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்புதான் படப்பிடிப்பு தொடங்கியது. என்றாலும், பரபரப்பாக பணியாற்றியதால் ஏறக்குறைய 40 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டார் வெங்கட்பிரபு.
இதுவரை எடுத்த காட்சிகளை வைத்து மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை தயார் பண்ணி வருகிறாராம் வெங்கட்பிரபு. அதை விரைவில் வெளியிடப்போவதாக டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் மாஸ் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு. அஞ்சான் படத்தின் தோல்வியை மக்கள் மறக்கும் அளவுக்கு மாஸ் படத்தின் வெற்றி இருக்க வேண்டும் என்று வெங்கட்பிரபுவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் சூர்யா.