வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
'ஓம் சாந்தி ஓம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணியான இயக்குனர் ஃபரா கான், ஷாரூக் கான், தீபிகா படுகோனே ஆகியோர் இணைந்துள்ள படம் 'ஹேப்பி நியூ இயர்'. வரும் தீபாவளியன்று இந்தப் படம் வெளியாக உள்ளது. இப்போதே படத்தின் பிரமோஷன் வேலைகளை ஆரம்பித்துவிட்டது படக்குழு. இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன், சோனு சூட், ஜாக்கி ஷெராப், பொம்மன் இரானி உட்பல மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
இப்படத்தின் சில காட்சிகளை ஷாரூக்கான், அமிதாப்பச்சனை சந்தித்துப் போட்டுக் காட்டினாராம். அவற்றைப் பார்த்த அமிதாப் ஷாரூக்கானை மிகவும் பாராட்டியிருக்கிறார். அதோடு அவருடைய பிளாக்கிலும் படத்தைப் பற்றிப் பாராட்டித் தள்ளியிருக்கிறார். “ஹேப்பி நியூ இயர்' அற்புதமாக, நிறைவாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் சீக்கிரம் முடிந்துவிடக் கூடாது என நீங்கள் நினைப்பீர்கள். அற்புதமான நடிப்பு, அழகான லொகேஷன்கள், கதையின் தாக்கம் அனைத்துமே படத்தில் அருமையாக அமைந்துள்ளது,” எனப் பாராட்டியிருக்கிறார்.
விஷால் சேகர் பாடல்களுக்கு இசையமைக்க, சந்தீப் சௌதா பின்னணி இசையமைக்கிறார். தமிழரான மனுஷ் நந்தன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷாரூக், தீபிகா ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்கள். 'ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ்' படங்களின் சாதனையை இந்த 'ஹேப்பி நியூ இயர்' முறியடிக்க வாய்ப்புள்ளதாக பாலிவுட்டில் இப்போதே பேசிக் கொள்கிறார்கள்.