Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதை கேட்பதை நிறுத்தினார் விஜயசேதுபதி!

04 செப், 2014 - 08:49 IST
எழுத்தின் அளவு:

இதுவரை 7 படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் விஜயசேதுபதி. அதில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்கள்தான் சறுக்கி விட்டன. மற்றபடி எல்லாமே நல்ல வசூல்தான். இதற்கிடையே ஜிகர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த விஜயசேதுபதி, அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள திருடன் போலீஸ் படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

இதையடுத்து, வன்மம் படத்தை முடித்து விட்ட அவரது கைவசம், மெல்லிசை, புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய், இடம் பொருள் ஏவல், வசந்த குமாரன், நானும் ரெளடிதான் என அரை டஜன் படங்கள் உள்ளன. இந்த படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருப்பதால், கால்சீட்டை துண்டு துண்டாக பிரித்துக் கொடுத்து நடித்து வருகிறார் விஜயசேதுபதி.


இந்த நிலையில், அவரிடம் அடுத்த ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டு என கால்சீட் கேட்டு பல கம்பெனிகள் துரத்தி வருகின்றன. அதே போன்று இளவட்ட இயக்குனர்களும் கதையோடு விஜயசேதுபதி செல்லும் இடமெல்லாம் முற்றுகையிட்டு வருகின்றனர்.


ஆனால் இதுவரை தன்னை சந்தித்தவர்களிடம் நல்ல கதையாக ரெடி பண்ணி வையுங்கள், ஓய்வு கிடைக்கும்போது கதை கேட்கிறேன் என்று கூறிவந்த அவர், இப்போது புதிதாக யாராவது கதை சொல்ல அணுகினால், இப்போதைக்கு கதை கேட்கும் ஐடியா இல்லை. கைவசம் உள்ள படங்கள் வெளியான பிறகுதான் பிரஷ்சாக கதை கேட்கயிருக்கிறேன் என்று திருப்பி விட்டு வருகிறார்.


இதனால் விஜயசேதுபதி கதை கேட்பதாக சொன்னதால், ஆர்வத்துடன் பல மாதங்களாக உதவி இயக்குனர்கள் குழுவுடன் ஸ்கிரிப்ட் தயாரித்து விட்டு அவரை தொட்ர்பு கொண்ட புதுமுக இயக்குனர்கள் பலத்த ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in