தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் அனைத்து இளவட்ட நடிகர்களுடன் நட்பாக பழகி வரக்கூடியவர் விஷால். ஆரம்பத்தில் ஆர்யாவுடன் மட்டுமே நட்பு வளர்த்தவர், அதையடுத்து நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டுகளில் பங்கேற்றபோது சிம்பு, விஷ்ணு, விக்ராந்த், ரமணா, சாந்தனு, ப்ருதிவி என பல இளவட்ட ஹீரோக்களுக்கும் நண்பராகி விட்டார்.
அப்படி பழகியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வரும் விஷால், பாண்டியநாடு படத்தில் தன்னுடன் நடித்த விக்ராந்துக்கு தனது விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பினையும் கொடுத்துள்ளார். அதையடுத்து, இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் இன்னொரு நண்பர் விஷ்ணு நடித்துள்ள ஜீவா படத்தை தானே வெளியிடவும் முன்வந்துள்ளாராம்
சில சினிமா மேடைகளில் விஷாலை விஷ்ணு கலாய்ப்பது, விஷ்ணுவை விஷால் கலாய்ப்பது என சில சம்பவங்கள் நடந்தபோதும், தொழில் என்று வருகிறபோது சீரியசாக யோசிக்கும் விஷால், நண்பன் விஷ்ணுவுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஜீவா படத்தை தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறாராம்.
கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று விஜய் டி.வியில் ஜீவா படத்தின் ஆடியோவை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 26-ந்தேதி படத்தை ரிலீஸ் பண்ண திட்டமிடப்பட்டுள்ளனராம்.