‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஷாரூக் கான், தீபிகா படுகோனே, சத்யராஜ் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தை இயக்கிய ரோகிஷ்த் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவகன், கரீனா கபூர் நடித்து வெளிவந்த 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் வசூல் சாதனை புரிந்த விதத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சுமார் 140 கோடி ரூபாய் வரையில் இந்தப் படம் வசூல் செய்துள்ளது. சல்மான் கான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடித்து வெளிவந்த 'கிக்' திரைப்படம் சுமார் 230 கோடி ரூபாய் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.
சல்மான் கான் நடித்து வெளிவந்த மற்றொரு படமான 'ஜெய் ஹோ' படம் 115 கோடி ரூபாய் வசூல் செய்து மூன்றாமிடத்திலும், நம்ம ஊர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்து வெளிவந்த 'ஹாலிடே' படம் 112 கோடி ரூபாய் வசூல் செய்து நான்காமிடத்திலும் உள்ளது. கடந்த சில வருடங்களகாவே ஹிந்தித் திரைப்படங்களின் வெற்றிப் படங்களின் வசூல் ஒரு சில வாரங்களிலேயே 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் சாதனை புரிந்து வருகின்றன. ஆனால், அப்படி வசூல் செய்யும் அனைத்துப் படங்களுமே கமர்ஷியல் படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், ஒரு சில தரமான படங்கள் 100 கோடி வசூலைத் தாண்டவில்லையென்றாலும், நல்ல வசூல் செய்து லாபத்தைத் தரும் படங்களாகவும் அமைகிறது.
அடுத்து இந்த வாரம் வெளியாக உள்ள பிரியங்கா சோப்ரா நடித்த 'மேரி கோம்' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.