'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
'எங்கேயும் எப்போதும்' படத்தில் அனன்யாவின் அக்காவாக நடித்து பிரபலமானவர் வினோதினி. தொடர்ந்து யமுனா, கடல், தலைமுறைகள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. இவருக்கும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சிவக்குமார் என்பவருக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. அடுத்தமாதம் அக்டோபர் முதல்வாரத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் மிக எளிமையாக இவர்களது திருமணம் நடைபெறுகிறது.