வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
பராகான் அக்தரும், ஷாரூக்கானும் இணைந்து நடிக்கும் ராயிஸ் படத்தின் படப்பிடப்பு தாமதமாகியுள்ளது, அடுத்தாண்டு துவக்கத்தில், இந்தப்படம் துவங்கும் என தெரிகிறது. தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் பராகான். பாக் மில்கா பாக் ஹீரோவான இவர், ஷாரூக்கானை வைத்து டான், டான்-2 படங்களை இயக்கியுள்ளார். முதன்முறையாக இவர்கள் இருவரும் ராயிஸ் என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ராகுல் தொலாக்கியா இயக்குகிறார்.
இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானபோதும் இப்படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் இன்னும் துவங்கவில்லை. இதுப்பற்றி விசாரித்ததில் இயக்குநர் ராகுல் சொன்ன கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லியுள்ளாராம் பராகான். அதனால் தான் படம் தாமதம் என்கிறார்கள். அதேசமயம் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போதைக்கு இல்லை என்றும், அடுத்தாண்டு துவக்கத்தில் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என்றும் கூறுகிறார்கள்.
இதனிடையே இப்படத்தின் கதாநாயகி முடிவாக நிலையில், கத்ரீனா கைப் மற்றும் சோனம் கபூர் இருவரும் நடிக்கலாம் என தெரிகிறது.