கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பரதேசி படத்திற்கு முன்பு வரை காதல் நாயகனாக மட்டுமே இருந்த அதர்வா, அதன்பிறகு மாறுபட்ட பர்பாமென்ஸ் வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்காரணமாக ஏராளமான கதைகள் கேட்டு, அதிலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய சில படங்களை மட்டுமே ஓ.கே செய்து நடித்து வருவதாகவும் சொன்னார்.
ஆனால் அப்படி அவர் நடித்த படங்களில் இரும்புக்குதிரை முக்கியமான படம். பைக் ரேஸை மையமாக கொண்டு உருவான இந்த படத்திற்காக டுகாட்டி பைக் ஓட்டி பழகியது முதல், சிக்ஸ் பேக்கிற்கு உடம்பை மாற்றியும் நடித்திருந்தார் அதர்வா. ஆனால், அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான அப்படம் தோல்வியடைந்து அதர்வாவுக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டது.
இந்த நிலையில், அடுத்தபடியாக தடகள வீரராக நடிக்கும் ஈட்டி படத்தில் நடித்து வருகிறார் அதர்வா. இளைஞர்களுககு பிடித்தமான கதைக்களத்தில் உருவாகும் அந்த படத்தில் ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகளிலும் கலந்து நடிக்கிறாராம். அதோடு முதன்முறையாக அந்த படத்தில் கவர்சசி கதவுகளையும் திறந்து விட்டுள்ளார் நாயகி ஸ்ரீதிவ்யா.
அதனால், இரும்புக்குதிரையில் நழுவ விட்ட வெற்றியை ஈட்டி மூலம் மீட்டு விடலாம் என்ற புதிய நம்பிக்கை அதர்வாவுக்கு ஏற்பட்டுள்ளதாம்.