கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, பாலிவுட்டின் நம்பர்-1 நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று பாலிவுட்டில் பல்வேறு விதமான ஓட்டெடுப்பை நடத்தியது. இதில் பாலிவுட்டின் நம்பர்-1 நடிகை யார் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் தீபிகா படுகோனே நம்பர்-1 நடிகையாக தேர்வு செய்யபட்டுள்ளார். அவர் சரசாரியாக 13 சதவீத ஓட்டுகள் வாங்கி நம்பர்-1 இடத்தை பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக கத்ரீனா கைப், கரீனா கபூர் இருவரும் 10 சதவீத ஓட்டுக்களும், சோனாக்ஷி சின்ஹா 9 சதவீத ஓட்டுக்களும், ப்ரியங்கா சோப்ரா 6 சதவீத ஓட்டுகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர்.
ஓம் சாந்தி ஓம், காக்டெயில், ஏய் ஜவானி ஹாய் திவானி, ராம் லீலா உள்ளிட்ட பல்வேறு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார், அவர்களுடன் நல்ல உறவில் இருக்கிறார் தீபிகா. சமீபத்தில் தான் உலகின் செக்ஸியான நடிகையாக தீபிகா படுகோனே தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.