Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசு கலாச்சாரம்...!

02 செப், 2014 - 17:01 IST
எழுத்தின் அளவு:

அரசியலில் மட்டும் வாரிசுகள் வளர்ந்து வாரிசு அரசியலை உருவாக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அதை விட சினிமாவில்தான் வாரிசு கலாச்சாரம் அதிகமாக வளர்ந்து வருகிறது. இன்றைய தேதியில் தங்களது வாரிசுகளை சினிமாவில் இறக்கி விடாத நட்சத்திரங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு உள்ளது. ஆனால், திரையுலகில் பெருமையான துறையான இயக்கத்தில் மட்டும் வாரிசுகள் அதிகம் ஈடுபடத் தயங்குகிறார்கள். அனைவருக்குமே நடிகராக வேண்டும் என்ற ஆசைதான் அதிகம் உள்ளது. அப்படிப்பட்ட வாரிசுகளுக்கு இடையிலும் எந்த திரைப்பட பின்னணியும் இல்லாத ஒரு சிலர் அவர்களது சொந்தத் திறமையால் வளர்வதை யாராலும் தடுக்க இயலவில்லை. சினிமாவைப் பொறுத்தவரை திறமைதான் முக்கியம், அதன் பின்தான் மற்றதெல்லாம் என்பதை நமது ரசிகர்களுக்கும் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டி வருகிறார்கள்.


சரி, தற்போதைக்கு வாரிசு கலாச்சாரத்தில் யார் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். ரஜினிகாந்தின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இயக்குனர்களாக உள்ளார்கள். கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா நடிகைகளாக உள்ளார்கள். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகன் விஜய் முன்னணி நடிகராக உள்ளார். நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி முன்னணி நடிகர்களாக உள்ளனர். சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நடிகையாக இருக்கிறார். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிகராக அறிமுகமாக உள்ளார்.


பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் நடிகர் அவதாரம் எடுத்து விட்டார். இவர்களது குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையும் நடிக்க வந்தாகி விட்டது. டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு நடிகராகவும், இளைய மகன் குறளரசன் இசையமைப்பாளராகவும் உள்ளனர். கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா விஷால் ஜோடியாக அறிமுகமானார். தியாகராஜன் மகன் பிரசாந்த் நடிகராக உள்ளார்.


ஜெமினி கணேசன் பேரன் அபிநவ் 'ராமானுஜன்' படத்தில் நடிராக அறிமுகமானார். நாசர் மகன் லுத்புதீன் 'சைவம்' படத்தில் நடிகராக அறிமுகம் செய்யப்பட்டார். இன்னும் பாண்டியராஜன், மயில்சாமி, சிங்கமுத்து, ஆகியோரின் மகன்கள் கூட நடிகராக உள்ளனர். நேற்று தமிழ், மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிகராக கமல்ஹாசனால் அறிமுகப்படுத்தப்பட்டார்.


இன்னும் இந்த பட்டியல் நீ....ண்டு கொண்டேதான் போகும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in