டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, இந்தியாவிலும் சூப்பர் ஸ்டார்தான். அதே சமயம் ஜப்பான் நாட்டிலும் அவர் சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார். இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் ஜப்பான் நாட்டில் இப்படிப்பட்ட வரவேற்பு இருக்காது என்பது நிச்சயம். இந்தியப் பிரதமர் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அவருடன் இந்திய பத்திரிகையாளர்களும் சென்றுள்ளனர். ஜப்பான் நாட்டிலுள்ள கியோட்டோ நகரில் நம்ம ஊர் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று ஜப்பான் இளைஞர் யசுதா என்பவரிடம் இந்தியாவைப் பற்றிய சில கேள்விகளைக் கேட்டது.
அதில் அவர் கையில் பாரதிய ஜனதா கொடியை வைத்துக் கொண்டு இது பிஜேபி என்கிறார். அடுத்து அந்த ஃபோட்டோவைத் திருப்புகிறார். அதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஜினிகாந்த் இருக்கும் போட்டோ இருக்கிறது. “எனக்கு ரஜினிகாந்தைப் பிடிக்கும். மோடி சாரும், ரஜினி சாரும் நெருங்கிய நண்பர்கள். நான் ஜப்பான் ரஜினி ஃபேன் கிளப் உறுப்பினர். எனக்குத் தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும். அவரைத் தலைவர்னு சொல்வாங்க. எனக்கு முத்து, பாஷா படங்கள் ரொம்ப பிடிக்கும். “பாஷா ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி ” என அந்த டயலாக்கையும் பேசிக் காட்டுகிறார்.
சமூக வலைத்தளங்களில் இந்த ஜப்பான் ரசிகர் யசுதா பேசும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஜினிகாந்த், ஜப்பான் நாட்டிலும் தொடர்ந்து ரசிக்கப்பட்டு வருவது ஆச்சரியமான ஒன்று. அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். ஆனால், இங்கோ ஒரு சிலர் தேவையில்லாமல் அந்தப் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார்கள் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.