இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நரம்பு நோயாளிகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டும் வகையில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற பெயரில் நடிகர்-நடிகைகளின் தலையில் ஐஸ் கட்டி தண்ணீரை ஊற்ற வைத்து அதை பேஸ்புக்கில் வெளியிட்டு, பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு நன்கொடைகளும் கிடைத்து வருகிறது. இந்த விளையாட்டில் நடிகர்- நடிகைகள் மட்டுமின்றி விளையாட்டு வீரர்களும் ஆர்வமுடன் கடந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சுக்கு சவாலாக நடிகர் மம்மூட்டி மை ட்ரீ சேலஞ்ச் என்ற பெயரில் இன்னொரு புதுமையான சவாலை அறிவித்திருக்கிறார். உலக வெப்பமயமாதலை தடுத்து, பூமியை காப்பாற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த சவாலில், மரக்கன்று நட்டு அதை பராமரித்து வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மம்மூட்டி, தனது வீட்டுத்தோட்டத்தில் தான் ஒரு மரம் நட்டு அந்த போட்டோவையும இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, தலையில் ஐஸ் தண்ணீரை ஊற்ற வேண்டாம். மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான் ஒரு மரம் நட்டுள்ளேன் உங்களால் இது முடியுமா? என்றும் ரசிகர்களுக்கு சவால் விட்டுள்ள மம்மூட்டி, இந்திய அளவில் உள்ள முன்னணி நடிகர்களையும் அவர்களது ரசிகர்களுக்கு இந்த சவாலை விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.