அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
2012ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த படம் இஷ்க். தமிழில் யாவரும் நலம் என்ற ஹிட் படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய மாஜி ஹீரோயின் ஜெயப்ரதா அதனை தமிழில் உயிரே உயிரே என்ற பெயரில் தயாரித்தார். விஷால் நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கினார். சித்து என்ற புதுமுகத்துக்கு ஜோடியாக முதலில் நித்யாமேனன் நடிப்பதாக இருந்தது பின்னர் ஹன்சிகா நடித்தார். கோவாவில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. பாதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தை என்ன காரணத்தாலோ கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
இப்போது படத்தை தூசி தட்டி எடுத்து மீண்டும் படிப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள். இதற்காக ஹன்சிகாவிடம் தேதி கேட்டிருக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.