மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். அவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மகன் பிரணவ் மோகன்லால் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மேஜர் ரவி இயக்கி 2002ம் ஆண்டு வெளிவந்த 'புனர்ஜனி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற மாநில விருதையும் பெற்றார். தற்போது இளைஞனாக உள்ள பிரணவ் விரைவில் நாயகனாக அறிமுகமாவார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவரோ உதவி இயக்குனராக ஆகிவிட்டார்.
மலையாளத்தில் அவருடைய அப்பா மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற 'த்ரிஷ்யம்' திரைப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க ரீமேக் ஆகி வருகிறது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் தான் தமிழ்ப் படத்தையும் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் மோகன்லால் மகனான பிரணவ் உதவி இயக்குனராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறாராம். பிரணவ் தன்னுடன் உதவியாளராக பணி புரிவதை இயக்குனர் ஜீது ஜோப்பே உறுதி செய்திருக்கிறார். விரைவில் நாயகனாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரணவ் தற்போது உதவி இயக்குனராக மாறியிருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது என்கிறார்கள் மல்லுவுட்டினர்.
இதனிடையே மலையாளம் மற்றும் தமிழில் நடிகராக உள்ள ஜெயராம் மகன் காளிதாஸ் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கும் அடுத்த படமான 'ஒரு பக்க கதை' படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். கமல்ஹாசன் இந்தப் படத்தை நாளை துவக்கி வைக்கிறார்.