தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரியங்கா சோப்ரா நடித்துள்ள மேரி கோம் படம் ஹிந்தித் திரையுலகில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படமாக அமைந்துள்ளது. வரும் வாரம் வெளியாக உள்ள இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீராங்கனையாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இந்தியாவுக்காக குத்துச் சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று கொடுத்த மேரி கோம் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்ட நாளில் இருந்தே நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் பிரியங்கா சோப்ரா மொட்டைத் தலையுடன் காட்சியளிக்கிறாராம். உண்மையாக மொட்டை அடிக்கவில்லையென்றாலும், ஒரு முழுப்படத்திற்காக மொட்டை அடிக்க வேண்டிய நிலை வந்தால் அதற்காக கண்டிப்பாக அடிப்பேன் என்று பிரியங்கா சோப்ரா கூறியிருக்கிறார்.
“மேரி கோம் படத்தில் ஒரு சில காட்சியில் மட்டுமே மொட்டைத் தலையுடன் நடிக்க வேண்டி இருந்ததால் உண்மையாக மொட்டை அடிக்கவில்லை. அதன் பின் முழு படத்திலும் எப்படி நடிப்பது. ஆனால், ஒரு படத்தில் முழுவதுமாக மொட்டைத் தலையுடன் நடிக்க வேண்டிய கதாபாத்திரம் வந்தால் அதற்காக கண்டிப்பாக மொட்டை அடிப்பேன். ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் நடிக்க வேண்டி வந்தால் எப்படி மொட்டை அடிக்க முடியும்,” என்கிறார் பிரியங்கா.
அறிமுக இயக்குனர் ஓமங் குமார் இயக்கியுள்ள மேரி கோம் திரைப்படம் வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.