தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அரண்மனை படத்தை ஹன்சிகா, சந்தானம், விஜய், ஆண்ட்ரியா, ராய்லட்சுமி என ஒரு பட்டாளத்தை வைத்து இயக்கியுள்ள சுந்தர்.சி அடுத்தபடியாக விஷாலை நாயகனாக வைத்து ஆம்பள என்ற படத்தை இயக்குகிறார். இப்போது பூஜையில் ஸ்ருதிஹாசனுடன் நடித்துக்கொண்டிருக்கும் விஷால், ஆம்பள படத்துக்காக ஹன்சிகாவுடன் ஜோடி போடுகிறார்.
அதோடு, அப்படத்தின் கதையில் சுவாரஸ்யம் கூட்டும் முயற்சியாக மாஜி ஹீரோயினிகளான ரம்யாகிருஷ்ணன், கிரண், சிம்ரன் ஆகியோரையும் காமெடி கலந்த வேடங்களில் நடிக்க வைக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், இதில் சிம்ரன் மட்டும் உடன்படவில்லை. ஏற்கனவே நானி நடித்த ஆஹா கல்யாணம் படத்தில் சிறிய ரோலில் நடித்து அது ஒர்க் அவுட்டாகாமல் போனதால், தொடர்ந்து துக்கடா வேடங்களில் நடித்து இமேஜை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கழன்று கொண்டாராம்.
அதனால், சிம்ரன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடிக்கொண்டிருந்த சுந்தர்.சி இப்போது சேர்ந்து போலாமா படத்தில் நாயகியாக நடித்த மதுரிமாவை புக் பண்ணியுள்ளார். செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். தீபாவளிக்கு விஷால் நடிப்பில் பூஜை திரைக்கு வருகிறது. அதையடுத்து பொங்கலுக்கு இந்த ஆம்பள ரிலீஸ் ஆகிறதாம்.