ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர்கள் அடுத்தடுத்து இயக்குனர்களாக அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் அவருடன் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி துப்பாக்கி படத்தில் இணை இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி, ரங்கூன் படத்தின் மூலம் இயக்குனராகிறார். கவுதம் கார்த்திக் ஹீரோ, ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.
அனிருத் இசை அமைக்கிறார். எம்.சுகுமார் கேமராமேன். ஏ.ஆர்.முருகதாசும், ஃபாக்ஸ்
ஸ்டார் ஸ்டூடியோவும் இணைந்து தயாரிக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
"கதை சொல்வதில் நேர்த்தியும் தனக்கு தேவையானது கிடைக்கும் வரை போராடும் குணமும் கொண்டவர் ராஜ்குமார் பெரியசாமி. அவர் இந்தப் படத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தனது சிஷ்யன் பற்றிக் கூறுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
"இது இளைஞர்களுக்கான கதை. இன்றைய இளைஞர்களின் பிரதிநிதியாக இருக்கும் கவுதம் படத்தின் நாயகனுக்கு சரியா தேர்வு. அனிருத், சுகுமார் என பலமான கூட்டணி இருப்பதால் தைரியத்துடன் படப்பிடிப்புக்கு செல்கிறேன்" என்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.