Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் பிறந்தநாளில் உத்தமவில்லன்! திருப்பதி பிரதர்ஸ் முடிவு!

29 ஆக, 2014 - 17:38 IST
எழுத்தின் அளவு:

சில தினங்களுக்கு முன் கமல் நடிக்கும் பாபநாசம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாபநாசம் படத்தில் நடிக்க தயாரான கமல் அதற்கு முன்பே உத்தமவில்லன் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டார். கமல் பாபநாசம் படத்தில் பிஸியாக இருக்க, உத்தமவில்லன் படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகளில் பிஸியாக இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த்.


உத்தமவில்லன் படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வரும் வேகத்தை வைத்து, படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளனர் திருப்பதி பிரதர்ஸ். அதன்படி கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம்தேதி அன்று உத்தமவில்லன் படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை கமலிடமும் தெரிவித்துவிட்டனர். அதைற்கு கமல் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


இதற்கிடையில், உத்தமவில்லன் படத்துக்கு முன் தொடங்கப்பட்ட விஸ்வரூபம் 2 படத்தை கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி அன்று வெளியிடப்போவதாக கூறி வருகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். ஐ படத்தைப் பற்றிய செய்திகளை தெரிவிக்க சில நிருபர்களை மட்டும் அழைத்து அப்படத்தின் டிரைலரை போட்டுக்காட்டினார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அப்போது அவரிடம் விஸ்வரூபம் 2 படத்தைப் பற்றியும் செய்தியாளர்கள் கேட்டார்களாம்.


அதற்கு அவர், விஸ்வரூபம் 2 படத்துக்கான கிராபிக்ஸ் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் ஆக்ஷன் மட்டுமின்றி நட்பு, பாசம், டான்ஸ், ஃபைட் என எல்லா கலவையும் கலந்த படமாக இருக்கும். மீண்டும் ஒரு சகலகலா வல்லவன் படம் பார்த்த திருப்தி ரசிகர்களுக்குக் கிடைக்கும். ஐ படம் தீபாவளிக்கு வெளியானபிறகு அதற்கு அடுத்த மாதம் அதாவது நவம்பர் 7 ஆம் தேதி விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்! என்று சொன்னாராம்.


உத்தமவில்லன் படம் நவம்பர் 7 ஆம் தேதி வெளிவருவதாக சொல்லப்படுகிறதே என்று கேட்கப்பட்டதற்கு, விஸ்வரூபம் 2 படத்துக்கு முன்னால் உத்தமவில்லன் படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டேன் என்று உறுதியாய் தெரிவித்தாராம் ஆஸ்கார் ரவி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in