இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி அதன் பிறகு திமிரு, வெயில் உள்பட தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்தார். பிரியதர்ஷன் இயக்கிய தேசிய விருது பெற்ற காஞ்சீவரம் படம்தான் அவர் கடைசியாக நடித்தது. அதன் பிறகு நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். விஷால் நடித்த தோரணை, வெடி படங்களை தயாரித்தார். தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஸ்ரேயா ரெட்டி மீண்டும் நடிக்க இருக்கிறார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தை கணோம் படத்தை இயக்கிய ராஜ்குமார் அடுத்து தயாரிக்கும் படம் அண்டாவை காணோம். இது கிராமத்து காமெடி கதை. ஹீரோயின் ஸ்ரேயா ரெட்டிக்கு சீதனாமாக ஒரு அண்டாவை கொடுக்கிறார்கள். அதனை பத்திரமாக பாதுகாத்து வருகிறார். திடீரென்று ஒரு நாள் அது காணாமல் போகிறது. அதை திருடியது யார், ஸ்ரேயா மீட்டாரா என்கிற கதை.
திமிரான கிராமத்து பெண் கேரக்டர். ஒரே நாளில் நடப்பது மாதிரியாக காமெடி கதை. சுசீந்திரன் உதவியாளர் பாலு இயக்குகிறார். இதில் முதலில் நடிக்க ராதிகாவைத்தான் கேட்டிருக்கிறார்கள். அதுசரியாக வரவில்லை என்பதால் ஸ்ரேயாயிடம் கதை சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார்கள்.
விரைவில் இந்தியா திரும்பும் ஸ்ரேயா தேனியில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். பெரும்பாலும் கிராமத்து மக்களே நடிக்கிறார்கள். முண்டாசுபட்டி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரேயா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார்.