'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஒரு குப்பைக்கதை. பாகன் படத்தை இயக்கிய அஸ்லாமின் உதவியாளர் காளிரங்கசாமி இயக்குகிறார். தினேசுக்கு ஜோடியாக வழக்கு எண் மனீஷா நடிக்கிறார். அஸ்லம் படத்தை தயாரிக்கிறார்.
படப்பிடிப்புகள் நேற்று சென்னை லாயிட்ஸ் காலணியில் துவங்கியது. இயக்குனர் அமீர், கிளாப் அடிக்க, எஸ்.பி.ஜனநாதன் கேமராவை இயக்க படப்பிடிப்புகள் தொடங்கியது. "இது நடுத்தர மக்களின் கதை. நகர்புற நடுத்தர மக்களின் வாழ்க்கை சூழலில் உள்ள சுக துக்கங்களை பதிவு செய்கிற படம்" என்றார் இயக்குனர் காளி ரங்கசாமி. "நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து நடிக்கும் உத்தேசமில்லை. நடனம்தான் என்னோட முதல் சாய்ஸ். எந்த சூழ்நிலையிலும் நடனத்தை கைவிடமாட்டேன்" என்றார் தினேஷ் மாஸ்டர்.