ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் வேங்கடாத்திரி எக்ஸ்பிரஸ், இது ரெயிலிலேயே நடக்கும் ஒரு பிரயாண காதல் கதை. ரொமாண்டிக் காமெடி படம். சந்தீப் கிஷன், ராகுல் ப்ரீத்தி சிங், பிரேம்ஜி, தகுபொத்து ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தார்கள். மெர்லபகா காந்தி இயக்கி இருந்தார். 10 கோடியில் எடுக்கப்பட்ட படம் 50 கோடி சம்பாதித்தது.
தற்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள் முத்துநகர் எக்ஸ்பிரஸ் அல்லது பொதிகை எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்படலாம். ஆதி ஹீரோ. ஹீரோயின் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. ஹீரோயினாக அநேகமாக ராகுல் ப்ரீத்தி சிங்கே இருக்கலாம். இவர் ஏற்கெனவே தமிழில் கவுதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
தற்போது ஆதி நடித்து வரும் யாகாவாராயினும் நாகாக்க படத்தை தயாரித்து வரும் அதர்ஷா சித்ராலயா நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. தெலுங்கு படத்தை இயக்கியவே இதையும் இயக்கலாம் என்று தெரிகிறது. ஆதி நடிக்க இருக்கும் முழு நீள காமெடி படம் இது.