Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லிங்கா பர்ஸ்ட் லுக் வெளியானது!

29 ஆக, 2014 - 11:01 IST
எழுத்தின் அளவு:

சூப்பர் ஸ்டார் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கும், லிங்கா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து வருகிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார்.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அதில் சூப்பர் ஸ்டார் ஒரு கோவிலின் பின்னணியில் ஸ்டைலாக நடந்து வருவது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. அவர் அணிந்துள்ள ஆடை வித்தியாசமாக உள்ளது. லேசாக கிழிந்த மாடல் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார். வெள்ளை பனியனுக்குமேல் முழுக்கை சட்டை அணிந்து பட்டனை திறந்து பறக்கவிட்டு வருகிறார். கழுத்தில் ஒரு டர்பனை கட்டி அதன் ஒரு முனையை தோளைச் சுற்றி தொங்கவிட்டிருக்கிறார். காலில் லெதர் ஷூ அணிந்திருக்கிறார்.


புலி நகத்தை டாலராக கழுத்தில் அணிந்திருக்கிறார். முகத்தில் கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறார். 80களில் வலம் வந்த ரஜினியை அப்படியே மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். அவர் நடந்து வரும்போது புழுதி பறப்பதாக டிசைன் செய்திருக்கிறார்கள்.


லிங்கா என்ற எழுத்து மெட்டல் லெட்டராக கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்திலும் ரஜினி கழுத்தில் அணிந்திருப்பது போன்ற புலி நக டிசைன் இருக்கிறது. இந்த பர்ஸ்ட் லுக் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களிடமும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in